search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் தொலைக்காட்சி பெண் ஊழியர்"

    கொடைரோடு அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துள்ளானதில் தனியார் தொலைக்காட்சி பெண் ஊழியர் பலியானார். டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
    கொடைரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த சின்னமருது மகள் அங்கையர்கரசி (வயது 24). இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவருடன், ஈரோடு கலெக்டர் அலுவலகம் பகுதியை சேர்ந்த ராமு மகள் ஷாலினி (24), சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ராம்குமார் (25), சதீஷ், கோகுல் ஆகியோரும் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் அனைவரும் நண்பர்கள். இதில் அங்கையர்கரசி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவரை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து ஒரு காரில் ஷாலினி உள்பட 4 பேரும் வந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியை சேர்ந்த பிரபுராஜ் (31) என்பவர் காரை ஓட்டினார். அவர்கள் பள்ளப்பட்டிக்கு வந்து அங்கையர்கரசியை பார்த்துவிட்டு, மீண்டும் காரில் புறப்பட்டு சென்னைக்கு சென்று கொண்டு இருந்தனர். மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் கொடைரோடு அருகே உள்ள பொட்டிக்குளம் பிரிவு என்ற இடத்தில் கார் வந்து கொண்டு இருந்தது.



    அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடியது. காரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர டிரைவர் முயன்றும் அது முடியவில்லை. அதற்குள் கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அப்பளம் போல கார் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி ஷாலினி உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்களை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷாலினி பரிதாபமாக இறந்தார்.

    சதீஷ், கோகுல், ராம்குமார், பிரபுராஜ் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×